ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி | ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகி மீது முதல் புகார் | 'திரிஷ்யம் 3' ஹிந்தியில் வேறு மாதிரி இருக்கும் ; இயக்குனர் அபிஷேக் பதக் | ரேடியோ நாடகத்துக்கு குரல் கொடுத்த மோகன்லால் |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயை போல தற்போது பாலிவுட்டில் நடிகையாக மாறி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கிலும் நுழைந்து ஜூனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' என்கிற படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த படம் வெளியானது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக ராம்சரணுக்கு ஜோடியாகவும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் 'பரம சுந்தரி' என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக சமீப நாட்களாக கேரளாவில் முகாமிட்டுள்ளார் ஜான்வி கபூர்.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் கேரளாவில் உள்ள பல இயற்கை தலங்களை சுற்றி பார்ப்பதுடன் பிரசித்தி வாய்ந்த கோவில்களையும் தரிசித்து வருகிறார் ஜான்வி கபூர். இது குறித்து புகைப்படங்களை 'கேரள டைரிஸ்' என்கிற பெயரில் தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஜான்வி கபூர். இவருக்கு மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ, கேரளாவில் ஒரு வழிகாட்டியாக இருந்து இந்த இடங்களுக்கு சுற்றி வருவதற்கு துணையாக சென்று வருகிறார். கடந்த வருடம் ஜான்வி கபூர் ஹிந்தியில் நடித்த 'உலாஜ்' என்கிற படத்தில் ரோஷன் மேத்யூ அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




