வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
தென்னிந்திய திரையுலகில் சமீப காலமாகவே பல வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற முன்னணி ஹீரோக்களின் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. மலையாள திரை உலகையும் இது விட்டு வைக்கவில்லை. அதிலும் குறிப்பாக நடிகர் மம்முட்டி நடித்த படங்கள் மாதத்திற்கு ஒன்று என்பது போல் கடந்த வருட இறுதியிலேயே தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
மம்முட்டி நடித்த 'பாவேரி மாணிக்கம், ஆவனாழி, வல்லியேட்டன்' ஆகிய படங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த நிலையில் 1989ல் மம்முட்டி நடிப்பில் வரலாற்று படமாக உருவாகி அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்த 'ஒரு வடக்கன் வீரகதா' என்கிற திரைப்படம் 4k முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் பிப்ரவரி 7ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இந்த படத்தில் சந்து செக்காவர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மம்முட்டியுடன் நடிகர் சுரேஷ் கோபியும், ஆரோமல் செக்காவர் என்கிற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் மறைந்த பிரபல கதாசிரியரும் இயக்குனருமான எம்.டி வாசுதேவன் நாயர் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார். சிறந்த நடிகர் உட்பட பல தேசிய விருதுகளை இந்த படம் வென்றது. இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மீண்டும் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆவதை முன்னிட்டு மலையாள நடிகர் சங்க கட்டட அலுவலகத்தில் இதன் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி மூவரும் கலந்து கொண்டனர்.