சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி | 73வது பிறந்தநாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவா! | விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல் | சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? |
பிரபல சீனியர் மலையாள குணச்சித்திர நடிகரான சித்திக் மீது மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 2016ல் அவர் தன்னிடம் ஒரு ஹோட்டலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு அது கொடுத்த துணிச்சலில் தான் இத்தனை வருடங்கள் கழித்து அவர் புகார் கொடுக்க முன் வந்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சித்திக் விண்ணப்பித்த முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலைமுறைவான சித்திக் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை பெற்றார்.
அதேசமயம் போலீசாரின் விசாரணைக்கும் அவர் சென்று வந்தார். ஆனால் தங்களிடம் அவர் சரியானபடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது முன் ஜாமீன் மனு மீதான இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதற்கு பதிலாக இன்னும் கால அவகாசம் கொடுத்து அவரது இடைக்கால ஜாமினை நீட்டிப்பு செய்துள்ளது. இது கேரள போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.