2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் ஜாபர் இடுக்கி. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது ஜாபர் இடுக்கி மீதும் புகார் கூறப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி பரிந்துரைப்படி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கேரள அரசு நியமித்துள்ளது. இந்த குழுவிற்கு இப்போதும் முன்னணியில் இருக்கும் நடிகை ஒருவர் அனுப்பி உள்ளள புகார் மனுவில், ''சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றபோது ஓட்டல் அறையில் வைத்து ஜாபர் இடுக்கி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று இருந்தோம். அப்போது நடிகர் பவன் கல்யாண் உள்பட 2 பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி ஜாபர் இடுக்கி என்னை கட்டாயப்படுத்தினார்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
விதவிதமான பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.