'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கலந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் எப்-2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எப்-3 என்கிற பெயரில் வெளியாகி அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ராணா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் பாலகிருஷ்ணா திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்ழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் இதற்கு அருகிலேயே நடந்து வருவதால் தனக்கு கிடைத்த இடைவெளி நேரத்தில் அவர் தனது நண்பரான வெங்கடேஷின் படப்பிடிப்பி தளத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.