'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தேவரா. கொரட்டல்ல சிவா இயக்கியுள்ள இந்த படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் காரணமாக படக்குழுவினர் புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் சென்னையில்கூட ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று (செப்.,22) ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த தேவரா படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அனிருத்தும் மேடையில் பாட இருந்தார். ஆனால் அரங்கிற்குள் ரசிகர்கள் வந்ததை அடுத்து ஹோட்டல் நிர்வாகம் வெளிகேட்டை மூடி இருக்கிறது. இதன் காரணமாக என்டிஆர் ரசிகர்களிடையே ரகளை ஏற்பட்டு ஓட்டலை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் நேற்று நடைபெற இருந்த தேவரா படத்தின் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்கள்.