பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபட்டி. அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் ராணா. சமீபத்தில் சிகாகோ பயணம் மேற்கொண்டிருந்த ராணா அங்கிருந்து ஊர் திரும்பும்போது சிகாகோவில் நடைபெற்ற ஒரு ரசிகருடனான சந்திப்பு சோசியல் மீடியாவில் வீடியோவாக வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதாவது சிகாகோவில் இருந்து கிளம்புவதற்காக விமான நிலையத்தை நோக்கி ராணா காரில் வந்திருக்கிறார். அப்போது பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து ஒரு ரசிகர் கண்ணாடியை இறக்கி ராணாவிற்கு ஹாய் சொல்கிறார். இதனை தொடர்ந்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்குகிறார் ராணா.
பின்தொடர்ந்து வந்த காரில் இருந்து அந்த ரசிகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ராணாவின் இந்த செயலால் இன்ப அதிர்ச்சி அடைந்து காரில் இருந்து இறங்கி அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களது காரின் பானெட்டிலும் ரசிகரின் சட்டையிலும் ஆட்டோகிராப் போட்டு தந்தார். ரசிகரை பார்த்ததும் ஒரு ஹாய் கூட சொல்லாமல் கார் கண்ணாடியை இறக்காமல் செல்லும் சில ஹீரோக்களுக்கு மத்தியில் ரசிகரை மதித்து அதுவும் வெளிநாட்டில், ராணா இப்படி நடந்து கொண்ட செயல் நெட்டிசன்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.




