சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கல்கி ஏடி 2898 என்கிற படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், சலார் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பிரபாஸ் தற்போது புதிதாக நடித்து வரும் படங்கள் எதுவும் இந்த வருடத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் தற்போது பழைய படங்களை ரீ ரீலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பிரபாஸின் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2010ல் பிரபாஸ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. அன்றைய தினம் அந்தப் படம் வெளியான நாளோ அல்லது பிரபாஸின் பிறந்தநாளோ எதுவும் இல்லாத நிலையிலும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதேபோல பிரபாஸின் அறிமுக படமான ஈஸ்வர் திரைப்படமும் பிரபாஸின் 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.