அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு ஏஞ்சல்ஸ் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேக்ஸ் பிஜாய். அடுத்த வருடமே தாக்க தாக்க என்கிற படத்தின் மூலம் தமிழுக்கும் வந்த இவர், துருவங்கள் பதினாறு, மாபியா, போர் தொழில் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல மலையாளத்தில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இவர், அய்யப்பனும் கோஷியும் படத்தில் அறிமுகப்படுத்திய பாடகி நஞ்சியம்மா பாடிய ‛கலக்காத்தா' பாடல் தேசிய விருது பெற்றது.
தொடர்ந்து மம்முட்டி, சுரேஷ்கோபி, பிரித்விராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் இவர், தற்போது முதன் முறையாக மோகன்லால் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது மோகன்லால், இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடித்து வரும் அவரது 360வது படத்திற்குத்தான் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். மோகன்லாலுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜேக்ஸ் பிஜாய்.