'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தியேட்டர்களில் நன்கு ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓடிடி தளத்திலும் வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றது. பொதுவாகவே பஹத் பாசிலின் படங்களுக்கு ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றாலும் கடந்த வருடம் அவர் நடித்த ‛தூமம்' என்கிற படத்தை சில காரணங்களால் இதுவரை எந்த ஓடிடி தளமும் வாங்கவில்லை.
படம் வெளியாகி 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வேறு வழியின்றி நேரடியாக யூடியூப்பில் இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். கன்னடத்தில் லூசியா மற்றும் யு டர்ன் என வியக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் பவன்குமார் முதல் முறையாக மலையாளத்தில் நுழைந்து இயக்கிய இந்த படம் அவருக்கும் பஹத் பாசிலுக்கும் வெற்றியை தர தவறியது. அதனாலயே இந்த படத்தை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனங்கள் தவிர்த்தன என்றும் சொல்லப்படுகின்றது.