'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது.
பொதுவாக தென்னிந்திய அளவில் புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியான பிறகு நான்கு வாரங்களிலேயே வெளியாகிவிடும். ஆனால், இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீடு தாமதமாக வெளியானது. மேலும், தியேட்டர்களிலும் தொடர்ந்து நல்ல கூட்டத்துடன் ஓடியதால் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
அடுத்த வாரம் மே 3ம் தேதிதான் ஓடிடியில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் சுமார் 10 வாரங்களுக்குப் பிறகே வெளியாகிறது. இருப்பினும் இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 20 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். தியேட்டர்களைப் போலவே ஓடிடி தளத்திலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பத்து வார இடைவெளியைக் கூட ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டதாம்.
மலையாளத் திரையுலகத்தில் ஒரு படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.