பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் சமீப காலமாக ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் உருவெடுத்துள்ளவர் நடிகர் பிரித்விராஜ். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படத்திற்கு மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள படே மியான் சோட்டே மியான் என்கிற படமும் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிரத்னம் பாராட்டு குறித்தும் அவரது இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரித்விராஜ். அப்போது அவர் கூறும்போது, “ராவணன் படத்தில் நடிக்கும்போது எனக்கு 25 வயதுக்குள் தான் இருக்கும். அந்தப் படம் தமிழ், ஹிந்தி என ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதால் படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலும் வடநாட்டு நடிகர்கள் அதிகம் இருந்தனர், அங்கே இருந்த ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் விக்ரம் ஆகியோரை எல்லோருக்கும் தெரிந்திருந்ததால் அனைவரும் அவர்களிடம் தேடி சென்று பேசுவதை பார்க்க முடிந்தது.
அதேசமயம் என்னைப் பற்றி சிலர் பேசும்போது யார் இந்த புது பையன், மணிரத்னம் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் நிச்சயம் விஷயம் உள்ளவனாகத்தான் இருப்பான் என்று என் காது படவே பேசிக் கொண்டார்கள். அந்த படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சிறிய ஆட்டுக்குட்டி போல தான் நான் உணர்ந்தேன். அதேசமயம் மணிரத்னம் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் நடிப்பில் மட்டுமல்ல டைரக்ஷனிலும் எவ்வளவோ விஷயங்களை கற்றுக் கொண்டேன். இன்று ஆடுஜீவிதம் படம் பார்த்துவிட்டு மணிரத்னம் பாராட்டியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.