ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலமாக ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் நிவின்பாலி. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து வந்தவர், சமீப காலமாக படங்களை சரியாக தேர்வு செய்யாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். தற்போது தமிழில் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழுமலை மற்றும் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வருஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்கள் நிவின்பாலிக்கு நம்பிக்கை தரும் படங்களாக உருவாகி உள்ளன.
இதில் வருஷங்களுக்கு சேஷம் படத்தின் இயக்குனர் வினீத் சீனிவாசன் தான் முதன்முதலாக தான் இயக்கிய மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தின் மூலம் நிவின்பாலியை அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து அவரை வைத்து சில படங்களை இயக்கியும் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்களது நட்பை அடைகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி வருஷங்களுக்கு சேஷம் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிவின்பாலிக்கு இந்த படம் ஒரு வெற்றிகரமான கம் பேக் ஆக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வினீத் சீனிவாசன்.




