இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.
இது தவிர நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். 2011ல் வெளியான 'உருமி' படத்தை தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபுதேவா. இந்த நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவாவின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக கத்தனார் படக்குழு வெளியிட்டுள்ளது. உருமி படத்திலும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு இந்த ரீ என்ட்ரியிலும் கூட மீண்டும் அதேபோன்று இன்னொரு வரலாற்று கதாபாத்திரம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்.