ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

உலகில் புகழ் பெற்று விளங்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரபல மியூசியங்களில் மெழுகுசிலை வைத்து பெருமைப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுசிலை தற்போது துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான அளவுகள் எல்லாம் கடந்த வருடமே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் திறப்பு விழா துபாயில் நடைபெற்றது. இதற்காக சமீபத்தில் தனது குடும்பத்துடன் துபாய் கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன்.
மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு, தனது மெழுகுச்சிலையுடன், புகைப்படம் எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுன் அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். இதில் யார் அல்லு அர்ஜுன், எது மெழுகுசிலை என எளிதில் தெரிந்து கொள்ளாத முடியாதபடி அந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, “ஒவ்வொரு நடிகருக்கும் இது ஒரு மைல்கல் தருணம்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.




