இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கடந்த வருடம் ஹிந்தியில் சல்மான் கானுடன் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்கிற படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்த பூஜா ஹெக்டேவுக்கு அந்த படம் வெற்றி பெற்றிருந்தால் அவரது ரேஞ்சே வேறு மாதிரி ஆகி இருக்கும். அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தெலுங்கிலும் இன்னும் சரியான பட வாய்ப்புகள் அமையாமல் இருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சித்து ஜொன்னல கட்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக சமந்தா தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக அவர் சினிமாவில் இருந்து இடைவெளி விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வருவதால் அவருக்கு பதிலாக தற்போது பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாகவே கதை தேர்வில் கோட்டை விடும் பூஜா ஹெக்டே இனி வரும் நாட்களில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.