‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக உருவானாலும் சமீபத்தில் டைட்டில் சர்ச்சையில் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பனம்'. இந்த படம் மார்ச் 1ம் தேதியே ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் இடம் பெற்றுள்ள பாரத என்கிற பெயரை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரத என்கிற பெயரை நீக்கிவிட்டு 'ஒரு சர்க்கார் உல்பனம்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டி.வி ரஞ்சித் என்பவர் இயக்கியுள்ளார். 96 புகழ் கவுரி கிஷன், மலையாள முன்னணி காமெடி நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கதாசிரியர் நிசாம் ராவுத்தர் என்பவர் கதை எழுதியுள்ளார். படம் நாளை (மார்ச்-8) வெளியாக இருக்கும் நிலையில் திடீரென நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் நிசாம் ராவுத்தர். இவரது வயது 49. இவரது மரணம் படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன் சச்சாரியாயுடே கர்ப்பிணிகள், பாம்பே மிட்டாய் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார்.




