கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே தேவாரா பட முதல் பாகம் ஏப்ரல் 5 அன்று வெளியாகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்புகளில் ஏற்படும் தாமதங்களால் இப்போது தேவாரா படத்தின் முதல் பாகம் ஜூன் மாதத்தில் தள்ளி வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.