பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

கடந்த 2019ம் ஆண்டில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'லூசிபர்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்கிற பெயரில் உருவாகிறது. இதையும் பிரித்விராஜ் இயக்குகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எம்புரான் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் படமாக்கபட்டு நிறைவு பெற்றதாக பிரித்விராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.