சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் அவர் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து தைரியமாக வெளிவந்து கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் கமெண்டரி செய்யும் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்.சி கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கல்யாணி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தான் பயிற்சி பெற்றது, நடித்தது ஆகிய அனுபவங்களை கொண்டு கொஞ்ச நேரம் இந்த போட்டியின் போது தானே லைவ்வாக கமெண்ட்ரி செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்படியே அங்கே வருகை தந்திருந்த பார்வையாளர்களிடம் தங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் கல்யாணி பிரியதர்ஷன்.