2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
மலையாள திரையுலகில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகராக இருப்பவர் அஜய்குமார் என்கிற கின்னஸ் பக்ரு. தமிழில் டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இவர், காவலன், அற்புத தீவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் குட்டியும் கோலும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார்.
அது மட்டுமல்ல உலகிலேயே உயரம் மிகக் குறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டு கின்னஸ் விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 916 குஞ்சூசுட்டான் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் கின்னஸ் பக்ரு. இந்த படத்தை ஆர்யன் விஜய் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவக்க விழா பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.