அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் |
இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக இசையமைத்து வருகிறார். தெலுங்கில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்திற்குப் பிறகு அவர் அதிகப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதே அதற்கு ஒரு காரணம்.
2021ல் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் தமன் இசையமைக்க பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் 'அகாண்டா'. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அந்தப் படம் குறித்து பொயப்பட்டி சீனு, ஒரு பேட்டியில் பேசும் போது ‛தமனின் பின்னணி இசை இல்லை என்றாலும் அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்' எனக் கூறியிருந்தார். அப்படத்தில் தமனின் பின்னணி இசை காட்சிகளை இன்னும் அதிரடியாகக் காட்டியது என்பதுதான் ரசிகர்களின் கருத்து. பொயப்பட்டி சொன்ன கருத்துக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் எக்ஸ் சமூக வலைதளத்தில், 'எனக்குக் கவலையில்லை' என ஒரே வரியில் பதிவிட்டுள்ளார். பொயப்பட்டி சீனுவின் பேட்டிக்கான பதிலடி தான் அது என ரசிகர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
பொயப்பட்டி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஸ்கந்தா' படத்திற்கு தமன் தான் இசை. பாலகிருஷ்ணா நடித்து அக்டோபர் 19ல் வெளிவர உள்ள 'பகவந்த் கேசரி' படத்திற்கும் தமன் தான் இசையமைத்துள்ளார்.