எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் 'பிரம்மயுகம்'. ராகுல் சதாசிவன் இயக்கும் இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் என நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த சில மாதங்கள் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் மம்முட்டி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அடுத்த வருட முதல் பாதியில் இத்திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.