'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'மாளிகப்புரம்' படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது 'ஜெய் கணேஷ்' என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார்.
இவர் மீது கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கடந்த 2018ம் ஆண்டு தன்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கதையை கேட்க தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன் பேரில் சென்ற தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உன்னி முகுந்தன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "தனக்கு 25 லட்சம் பணம் கொடுத்தால் உங்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்த பெண் கட்டாயப்படுத்தியதாகவும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து முகுந்தனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில் இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் கண்டு விட்டதாக முகுந்தனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த பெண்ணோ முகுந்தன் வழக்கறிஞர் கூறுவது போல் சமரசம் ஏதும் ஏற்படவில்லை. உன்னி முகுந்தன் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக கோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் நடிகர் உன்னி முகுந்தன் கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என தெரிவித்தது. அதோடு வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உன்னி முகுந்தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த இளம் பெண் தான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கோர்ட்டில் வந்து மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.