சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'பேபி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை வைஷ்ணவி சைதன்யா. இதற்கு முன்பு தமிழில் 'வலிமை' படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் சித்து ஜொனலகட்டா ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் நடிகை வைஷ்ணவி சைதன்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் தயாரிக்கின்றனர்.