'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? |
நடிகர் மம்முட்டி தற்போது 72 வயதான நிலையிலும் மலையாள திரை உலகில் உச்ச நட்சத்திரமாகவே நடித்து வருகிறார். இந்த வயதிலும் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். மம்முட்டியைத் தவிர அவரது உடன்பிறந்தவர்கள் யாரும் சினிமாவில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. அந்த வகையில் தற்போது 70 வயதான மம்முட்டியின் சகோதரி அமீனா உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே தொடர் சிகிச்சை எடுத்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தி உள்ளார்.
இதைத் தொடர்ந்து பலரும் அமீனாவின் மறைவுக்கு தங்களது இரங்கல்களையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் மம்முட்டியின் தாயார் அவரது 93 வது வயதில் காலமானார். அவர் மறைந்த அடுத்த சில மாதங்களிலேயே மம்முட்டியின் சகோதரியும் தற்போது இந்த உலகை விட்டு சென்றுள்ளது மம்முட்டியின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.