எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள சினிமாவில் ஆக்சன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே பல வருடங்களாக படம் இயக்கி வந்த ஜோஷி, எல்லா சீனியர் இயக்குனர்களும் ஒரு கட்டத்தில் சந்திக்கும் பின்னடைவை சந்தித்தார். அதை அடுத்து கடந்த 2019ல் மலையாள குணச்சித்திர நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், கோலிசோடா 2வில் வில்லனாக நடித்த செம்பான் வினோத் மற்றும் நடிகை நைலா உஷா ஆகியோரை வைத்து 'பொரிஞ்சு மரியம் ஜோஸ்' என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றி மூலம்தான் மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற முடியும் என்கிற நிலையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து வழக்கம் போல முன்னணி நடிகர்களை தேடி சொல்லாமல் இதே படத்தில் நடித்த இந்த மூன்று நடிகர்களையும் வைத்தே ஆண்டனி என்கிற படத்தை தற்போது இயக்கிய வருகிறார். இதில் கூடுதலாக கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கொத்தா படத்தை இயக்கிய அபிலாஷ் ஜோஷி இவரது மகன் தான் என்பதும் தற்போது ஆண்டனியில் நடித்துள்ள செம்பான் வினோத் நைலா உஷா இருவருமே கிங் ஆப் கொத்தா படத்திலும் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது