Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சர்ச்சை ஹீரோக்களின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி

29 ஆக, 2023 - 01:11 IST
எழுத்தின் அளவு:
A-victory-for-the-alliance-of-controversial-heroes

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் மூவரும் நடித்திருந்தனர். இந்த படத்தை நகாஷ் ஹிதாயத் என்பவர் இயக்கியிருந்தார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தபடம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ஸ்டைலிஷான ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்தப் படத்தின் நாயகர்களில் ஒருவரான ஷேன் நிகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற படத்தில் நடித்தபோது சம்பள விஷயம் காரணமாக தயாரிப்பாளருடன் முரண்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருந்த சூழலில் தனது கெட்டப்பை மாற்றி வேறு ஒரு படத்திற்கு தயாராகி அதிர்ச்சி அளித்தார். அவர் மீது இந்த ரெட்கார்டு போடப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக மிக கடினமான சூழலை சந்தித்து வந்தார். அந்த சமயத்தில் உருவாகி வந்த படம் தான் இந்த ஆர்டிஎக்ஸ். அதனால் இந்த படத்தில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

அதேபோல லிஜோ ஜோ பள்ளிசேரியின் அங்கமாலி டைரீஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே வரவேற்பை பெற்றவர் ஆண்டனி வர்கீஸ் பீபீ. அதை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு இந்த ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 2018 படத்தின் டைரக்டர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு பேட்டியில் கூறும்போது ஆண்டனி வர்கீஸ் எனக்கு ஒரு படம் நடித்து தருவதாக சொல்லி 10 லட்சம் அட்வான்ஸ் வாங்கி விட்டு படத்திலும் நடிக்கவில்லை.. அட்வான்ஸ் செய்யும் திருப்பிக் கொடுக்கவும் இல்லை.. அதை நினைத்து பல நாட்கள் கதறி அழுதேன். என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனால் ஆண்டனி வர்கீஸ் மீது மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் குவிந்தன.

இந்த நிலையில் தான் தற்போது வெளியாகியுள்ள ஆர்டிஎக்ஸ் படத்தின் வெற்றி இந்த இரண்டு சர்ச்சை ஹீரோக்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இனியாவது சினிமா தொழிலை முறையாக இவர்கள் இருவரும் அணுகி இன்னும் உயரம் தொடுவார்கள் என நம்புவோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகார்ஜூனா 99வது பட அப்டேட் வெளியானதுநாகார்ஜூனா 99வது பட அப்டேட் வெளியானது முந்தைய வெற்றி பட நட்சத்திரங்களுடன் மீண்டும் களமிறங்கும் இயக்குனர் ஜோஷி முந்தைய வெற்றி பட நட்சத்திரங்களுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in