டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இரண்டு நடிகர்கள் மீதும், தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் முறையான ஒத்துழைப்பு தரவில்லை என்கிற புகார்களின் அடிப்படையில் ரெட் கார்டு போடப்பட்டது. அதேசமயம் அவர்கள் ஏற்கனவே நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும், போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபடலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷேன் நிகம் நடித்துள்ள ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஷேன் நிகம் தனது தவறுகளுக்கு பொறுப்பேற்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக அல்லாத ஸ்ரீநாத் பாஷியும் இதேபோன்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து இவர்கள் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இவர்கள் புதிய படங்களில் நடிக்கலாம் என்றாலும் தயாரிப்பாளர்கள் தங்களது சொந்த ரிஸ்க்கில் தான் இவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமே தவிர இவர்கள் குறித்து ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமோ பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.




