'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் பவன் கல்யாண் தற்போது 'ஓ.ஜி' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வந்தார். ஸ்ரீ லீலா இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் யாரும் ஒப்பந்தம் ஆகவில்லை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது.
சமீபத்தில் பவன் கல்யாண் வருகின்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் உஸ்தாத் பகத் சிங் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இப்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, பவன் கல்யாண் சம்மந்தப்பட்ட காட்சிகளை விரைந்து படமாக்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு மற்ற நடிகர், நடிகைகள் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி 2024 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.