ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கில் பான் இந்தியா படமாக தயாராகிறது 'ஸ்பார்க்'. அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குரு சோமசுந்தரம் , நாசர், சுஹாசினி, வெண்ணிலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், அன்னபூர்ணம்மா, ராஜா ரவீந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
டெப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் விக்ராந்த் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோ ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை மெஹ்ரின் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக தயாராகி உள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.