ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி, வெளியீட்டிற்கு தயாராகி உள்ள படம் ‛கிங் ஆப் கோதா'. துல்கர் சல்மான் நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் அபிலாஷ் ஜோஷி. இவர் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் ஆவார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மானை பொறுத்தவரை தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார். இதனால் கிங் ஆப் கோதா திரைப்படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.