மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? |
கேரளாவின் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் எய்திய நிலையில் அவரது உடல் அங்கிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உடலை பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்வதற்காக வந்திருந்தவர்களில் நடிகர் குஞ்சாக்கோ போபனும் ஒருவர்.
இந்த நிலையில் தற்போது உம்மன் சாண்டியின் மறைவு குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, "அவரது மறைவு எனக்கு பெர்சனல் ஆக மிகப்பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “நான் இங்கே அவரது உடலை பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றால் அவருடன் எனக்கு நீண்ட காலமாக பழக்கம் இருந்து வருகிறது. அவருடைய குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகி வந்திருக்கிறேன். என்னுடைய வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல அவரது வீட்டிற்கு எந்த நேரத்திலும் நான் வந்து செல்லும் சுதந்திரத்தையும் அளித்திருந்தார்.
நான் பார்த்த எளிமையான மக்கள் தலைவர்களில் முதன்மையானவர் உம்மன் சாண்டி. ஒருநாள் நள்ளிரவு அவரது வீட்டிற்கு சென்றபோது கூட மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டும் அருகில் இருந்த அதிகாரிகளிடம் பேசிக்கொண்டும் இருந்தார். அப்படிப்பட்டவரின் இழப்பு எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பேரிழப்பு தான்” என்று தனது சோகத்தை வெளிப்படுத்தினார் குஞ்சாக்கோ கோபன்.