பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் |
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் தயாரிக்கும் முதல் மலையாள வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. அகமது கபீர் இயக்கி உள்ளார். அஜு வர்க்கீஸ் மற்றும் லால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மராட்டியம், பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பாலியல் தொழிலாளியின் படுகொலை பெரிய பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் தொடரின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பரபரப்பான இன்வெஸ்டிகேசன் த்ரில்லராக உருவாகி உள்ளது. இதன் டீசரை மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் மோகன்லால் வெளியிட்டார். வருகிற 23ம் தேதி வெளியாகிறது.