பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் மற்றும் அனுஷ்காவின் பாகமதி, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்திலும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தயாரிப்பாளராக மாறி இவர் தயாரித்த மேப்படியான் மற்றும் மாளிகைப்புரம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் கோடிகளில் வசூலையும் குவித்தன. சமீபத்தில் கூட கேரளாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதே சமயம் கடந்த 2018ல் உன்னி முகுந்தன் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். தான் அடுத்ததாக எடுக்க இருக்கும் படத்தின் கதை விவாதம் குறித்து பேசுவதற்காக ரிசார்ட் ஒன்றுக்கு தன்னை அழைத்த உன்னி முகுந்தன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே சம்பந்தப்பட்ட அந்த பெண் இப்படி தவறாக புகார் அளித்திருக்கிறார் என்றும் இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புகார் அளித்த சம்பந்தப்பட்ட பெண் இந்த வழக்கிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டதால் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல தொடரும் என்று கூறி உன்னி முகுந்தனின் மனுவை நிராகரித்து விட்டது.