‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தயாரித்தது இவர்தான். மேடைகளில் அதிரடியாக மற்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசுவதில் வல்லவரான தில் ராஜு தயாரிப்பில் சிறிய பட்ஜெட் படமாக கடந்த மாதம் பாலகம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் நடிகர் விஜய் பற்றி கிண்டலாக பேசி சர்ச்சையில் சிக்கினார் தில் ராஜு.
தற்போது இந்த படம் வெளியாகி ஒரு மாதமே ஆன நிலையில் ஆந்திராவில் உள்ள பல கிராமங்களில் பொதுவெளியில் திரை கட்டி இந்த படத்தை திரையிட்டு ஊர் மக்கள் ரசித்துள்ளனர். இந்த படம் குடும்ப உறவுகளை பெருமைப்படுத்தும் வகையில் அதே சமயம் இளைஞர்களையும் கவரும் விதமாக பாமர கிராமத்து மக்களுக்கும் புரியும் விதமாக உருவாகியுள்ளதால் பலரும் இந்த படத்தை பாராட்டியதுடன் சினிமா தியேட்டருக்கே செல்லாத தங்கள் ஊர் மக்களும் பார்க்கட்டும் என்கிற நோக்கில் டிவிடி ப்ரொஜெக்டர் மூலமாக இதைத் திரையிட்டுள்ளனர்.
இதுகுறித்த வீடியோக்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியான தில் ராஜு இப்படி அனுமதியின்றி பொதுவெளியில் தனது திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்படி திரையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளாராம்.