ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
கன்னடத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி படங்களாக மாற்றி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இதை தொடர்ந்து தற்போது சலார் படத்தை இயக்கி வருகிறார். அதையடுத்து ஜூனியர் என்டிஆரின் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவலும் வெளியானது.
அதேசமயம் கன்னடத்தில் உருவாகி வரும் பகீரா என்கிற படத்திற்கு பிரசாந்த் நீல் கதை எழுதி உள்ளார். கன்னட நடிகர் ஸ்ரீ முரளி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பஹத் பாசில் நடிக்கிறார் என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டது. இடையில் நடிகர் ஸ்ரீ முரளி படப்பிடிப்பில் காயமடைந்து, தற்போது குணமடைந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
அதே சமயம் இந்த படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா என்பது குறித்து இப்போது வரை இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஏஜே ஷெட்டி என்பவர் கூறும்போது, “படம் ஆரம்பித்த சமயத்திலேயே பஹத் பாசில் நடிப்பதாகத்தான் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அவரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் இப்போது அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் கேஜிஎப், காந்தரா படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. கன்னட இயக்குனர் பவண்குமார் முதல் முறையாக மலையாளத்தில் பஹத் பாசிலை வைத்து இயக்கி வரும் தூமம் என்கிற படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. ஒரே நிறுவனம் தயாரிக்கும் படங்கள் என்பதால் இந்த பகீரா படத்திலும் பஹத் பாஸில் நடிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றே இப்போது வரை சொல்லப்பட்டு வருகிறது.