கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி | 25 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஆனந்தம்' | பிளாஷ்பேக்: செவிக்கு விருந்தளித்து, விழிக்கு விருந்தளிக்காமல் போன கே பாக்யராஜின் “காவடிச் சிந்து” | வெளியான உடன் ஹிட்டான 'பெத்தி' படத்தின் அதிரடி கிளாமர் பாடல் | முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம் |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களில் ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராகவும் தன்னை உருமாற்றிக் கொண்டார். அது மட்டுமல்ல இந்தியில் தற்போது படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திலும் வில்லனாகவும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக மோகன்லாலை வைத்து தான் இயக்கிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தையும் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் முதன்முறையாக டிஜிட்டல் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ள பிரித்விராஜ் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இந்த வெப்சீரிஸை தயாரிக்கும் சரிகம இந்திய நிறுவனத்தின் துணைத்தலைவரான சித்தார்த் ஆனந்த் குமார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிஸ்கட் கிங் ராஜன் பிள்ளை என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக இருப்பதாகவும் இதனை பிரித்விராஜே இயக்கவும் செய்கிறார் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதேசமயம் தற்போது இந்த வெப்சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் பிரித்விராஜ் இதை இயக்குகிறாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.




