எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் வாரிசாக செகண்ட் ஷோ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் துல்கர் சல்மான். ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இந்த படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படத்தில் தான் மலையாள நடிகை கௌதமி நாயரும் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த கௌதமி நாயர், கடந்த 2017ல் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் பரபரப்பாக பேசப்பட்டது.
இவர்கள் திருமணம் முடிந்த ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தங்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் கௌதமி நாயர். இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமண வாழ்க்கை துவங்கிய சில காலகட்டங்களிலேயே எனக்கும் அவருக்குமான கருத்து வேறுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக தலை தூக்கியது. அதேசமயம் அவரிடம் இருந்து துன்புறுத்தல், அச்சுறுத்தல் என எந்த ஒரு தவறான செய்கையும் என் மேல் பிரயோகிக்கப்படவில்லை. யாராவது ஒருவராவது சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் எங்கள் இருவராலும் அப்படி சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் பேசி டீசன்டாக பிரிந்து விடலாம் என இந்த முடிவுக்கு வந்தோம். இப்போது கூட நாங்கள் நண்பர்களைப் போல அவ்வப்போது ஒருவர் குறித்து ஒருவர் விசாரித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.