ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி. இவரது தந்தை சுரேஷ்பாபு தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக இருக்கிறார். சமீபத்தில் இவர்கள் இருவர் மீதும் ஐதராபாத்தை சேர்ந்த பிரமோத் குமார் என்கிற தொழிலதிபர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளார். இதையடுத்து ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ்பாபு இருவருக்கும் மே 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பை தொடர்ந்து இருவர் தரப்பில் யாராவது ஒருவர் பத்திரிகையாளர்களை சந்தித்து இது குறித்த தகவல்களை வெளியிடுவார்கள் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் புகார் கொடுத்த தொழிலதிபர் பிரேம் குமார் என்பவர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த வழக்கு தொடுக்கும் அளவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்கிற விவரத்தை கூறியுள்ளார்.
“ராணாவின் தந்தை சுரேஷ்பாபுவிடம் பிளிம்நகர் கூட்டுறவு சொசைட்டியில் அவருக்கு சொந்தமான இடத்தை 18 கோடி விலை பேசி 5 கோடி முன்பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அதில் மில்க் ஷேக் கம்பெனி நடத்தி வருகிறேன். ஆனால் மீதித்தொகையை பெற்றுக்கொண்டு என் பெயரில் இடத்தை மாற்றி தருவதற்கு மறுத்து வந்தார் சுரேஷ்பாபு. இதைத்தொடர்ந்து அவர் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பின்னர் தான் இது குறித்து விசாரித்தபோது என்னிடம் விலைபேசிய அந்த இடத்தை தனது மகன் ராணாவின் பெயருக்கு அவர் மாற்றிவிட்டார் என்பது தெரிய வந்தது.
கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி ராணா மற்றும் அவரது தந்தையால் ஏவி விடப்பட்ட 12 குண்டர்கள் என்னுடைய இடத்திற்கு வந்து என் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து என்னை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தேன். ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த புகாரை ஏற்க விடாமல் அவர் செய்துவிட்டனர் சுரேஷ்பாபு மற்றும் ராணா இருவரும்.. இதைத் தொடர்ந்தே நான் நீதிமன்றத்தில் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தேன். அவர்கள் இருவரையும் வரும் மே 1ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.