என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது. இந்தப்படத்திற்கு முன்பு இருந்ததைவிட இந்த படத்தின் மூலமாக படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி தற்போது இந்திய அளவில் தெரிந்த மிகப்பெரிய நடிகராகிவிட்டார். இந்தநிலையில் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் 'ஹாஸ்டல் குடுகாடு பெகாகிட்டரே' என்கிற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
இவர் மட்டுமல்ல கன்னட சினிமாவின் இன்னொரு பிரபல இயக்குனரான பவன்குமார் மற்றும் இன்னொரு நடிகரான ஷைன் ஷெட்டி ஆகியோரும் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ஒரே காட்சியில் வரும் விதமாக நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் கல்லூரியில் முன்னாள் நண்பர்கள் சந்திப்பு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காட்சியில் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இவர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த படத்தை இயக்கி வரும் நிதின் கிருஷ்ணமூர்த்தி லூசியா உள்ளிட்ட படங்களில் இயக்குனர் பவன் குமார் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். “இரண்டு மாபெரும் இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டு தற்போது அவர்களே என்னுடைய படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டது மிகப்பெரிய சந்தோஷம். இவர்களது வருகை இந்த படத்திற்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் நிதின் கிருஷ்ணமூர்த்தி.