அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

மலையாள திரையுலகில் ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரீஸ் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் இயக்குனர் லிஜோஜோஸ் பெள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் லிஜோஜோஸ். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் பொள்ளாச்சியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் மம்முட்டி ஒரு சாதாரண எளிய கிராமத்து மனிதனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர்கள் அவ்வப்போது வெளியாகி மிகப்பெரிய ஆச்சரியத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தின. தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தை தனது மம்முட்டி கம்பெனி சார்பாக தயாரித்துள்ள மம்முட்டி வரும் ஜனவரி 19 ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது என இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.