'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
பஹத் பாசில் தற்போது முதல்முறையாக கன்னட திரை உலகில் நுழைந்து தூமம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதன் முறையாக கன்னட திரை உலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பவன்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக விவியன் ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டாக்குமெண்ட்ரி பட இயக்குனரும் கூட. தற்போது இவர் மீது கர்நாடகாவை சேர்ந்த மாடல் ஒருவரும் மாடல் ஒருங்கிணைப்பாளரும் என இரண்டு பெண்கள் மீ டூ புகார் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாடல் அழகி சோசியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், டாக்குமென்ட்ரி படப்பிடிப்பு சமயத்தில் விவியன் ராதாகிருஷ்ணன் தனது உடலில் தொடக்கூடாத பகுதிகளை தொட்டதாகவும் மேலும் அவரது உடலை தனது உடல் மேல் படச்செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அந்த மாடல் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது விவியன் ராதாகிருஷ்ணனுடன் பணியாற்றிய நாட்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தொல்லைகளுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.