சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

கோபிசந்த் மாலினேனி டைரக்ஷனில் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் இன்று(ஜன., 12) வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இன்னொரு முக்கிய வேடத்தில் மலையாள நடிகை ஹனிரோஸ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உற்சாகமாக பேசிய பாலகிருஷ்ணா மேடையில் இருந்த ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்டு அவர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து பாராட்டி பேசினார்.
அப்போது ஹனிரோஸ் குறித்து பேசும்போது அவர் அருகில் இல்லாததால் எங்கே என்று கேட்டபடி அவரை தேடினார் பாலகிருஷ்.ணா ஒரு ஓரமாக தள்ளி நின்று கொண்டிருந்த ஹனிரோஸை பார்த்து இங்கே முன்னால் வாம்மா என்று அழைத்து அவரை பற்றியும் அவரது நடிப்பு குறித்தும் பாராட்டி பேசினார். அதை தொடர்ந்து அந்த நிகழ்வில் முழுக்க முழுக்க தெலுங்கிலேயே பேசி தெலுங்கு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஹனிரோஸ். இதை தொடர்ந்து அவர் பேச்சு குறித்த வீடியோக்களின் கீழே தெலுங்கு நடிகைகளை விட அழகான தெலுங்கில் பேசி அசத்தி விட்டீர்கள் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.