அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை | மகாநடி படத்தில் நடிக்க மறுத்த துல்கர் சல்மான்; நாக் அஸ்வின் வெளியிட்ட புது தகவல் | வேலை வேண்டும் என்பதற்காக என்னையே விற்கும் ஆள் அல்ல நான்; ரெஜினா கசான்ட்ரா தில் பேச்சு | பிளாஷ்பேக் : 80 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை கொடுமை பற்றி பேசிய படம் | ஜெய் பீம் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டது தவறான முடிவு; மனம் திறந்த சூர்யா | 2025ல் சிவகார்த்திகேயன் நடிக்க 'புறநானூறு' ஆரம்பம் |
மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், சங்க்ஸ் என ஹிட் படங்களை கொடுத்தாலும் புருவ அழகி என அழைக்கப்பட்ட பிரியா வாரியர் நடிப்பில் வெளியான ஒரு அடார் லவ் படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஒமர் லுலு. இந்த நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் உருவான நல்ல சமயம் என்கிற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படத்தில் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட ஒரு போதைப்பொருள் பற்றி புரமோட் செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வேண்டுமென்றே தன் மீதும் தனது படத்தின் மீதும் களங்கம் சுமத்தும் விதமாக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கொந்தளித்துள்ளார் இயக்குனர் ஒமர் லுலு.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏதோ நான் மட்டுமே இப்போது புதிதாக இந்த போதைப்பொருளை எனது படத்தில் காட்டுகிறேன் என்பதுபோல வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். இதற்கு முன்னதாக மம்முட்டியின் பீஷ்ம பருவம், மோகன்லாலின் லூசிபர் ஆகிய படங்களில் இதே பொருளும் அதன் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தவிர தற்போது நாட்டில் நிகழும் இந்த போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து பேப்பரில் வரும் ஆதாரத்தை வைத்து கதையின் தேவைக்காக படத்தில் காட்சியாக பயன்படுத்தியுள்ளேனே தவிர, இந்த போதைப் பொருளை புரமோட் செய்யும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை.
மேலும் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்து 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் ஏ சான்றிதழும் அளித்துள்ளனர். அப்படி சென்சார் அதிகாரிகள் அனுமதித்த நிலையில் வேண்டுமென்றே இப்போது வழக்குப் பதியப்பட்டுள்ளதில் உள்நோக்கம் இருக்கிறது. இதை முறையாக நான் எதிர் கொள்வேன்” என்று கூறியுள்ளார் ஒமர் லுலு.