பிளாஷ்பேக்: ஆங்கில கதையின் தழுவலில் வந்து, அபார வெற்றியைப் பெற்ற “மனோன்மணி” | விக்னேஷ்சிவன் அப்படி செய்திருக்ககூடாது: நடிகை சோனா | முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுங்க : கூல் சுரேஷ் திடீர் வேண்டுகோள் | அண்ணன் இளையராஜா பற்றி தவறான தகவல் பரப்பாதீர்கள் : தம்பி கங்கைஅமரன் ஆதங்கம் | அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி | சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்' | 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி | ‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில் | ‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள் | ‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி |

தெலுங்கு திரையுலகில் இந்த வருட சங்கராந்தி பண்டிகைக்கு இளம் நடிகர்கள் ஒதுங்கிக்கொள்ள, பல வருட இடைவெளிக்குப் பிறகு சீனியர் நடிகர்களான சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா படமும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் ஒன்றாக மோதுகின்றன. இந்த இருவரும் தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரமாக கலந்து கொண்டு வருகின்றனர். சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரைய்யா படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாஸ் பார்ட்டி என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஊர்வசி ரவுட்டேலா சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். இவர் தான் அண்ணாச்சி சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் வால்டர் வீரைய்யா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது புகழ்ச்சி வார்த்தைகளால் ஊர்வசி ரவுட்டேலாவை ஐசகட்டி மழையில் நனைய வைத்துவிட்டார் சிரஞ்சீவி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்த படத்தில் ஊர்வசி பாஸ் பார்ட்டி பாடலில் அருமையான பங்களிப்பை கொடுத்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது அற்புதமாக இருந்தது. முதலில் அந்த பாடலுக்கு யார் ஆடுகிறார்கள் என எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் ஊர்வசி தான் ஆடப் போகிறார் என்று தெரிந்ததுமே நான் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று கூறினார் சிரஞ்சீவி.
இப்படி சிரஞ்சீவியே தன்னைப்பற்றி புகழ்ந்து பேசினார் என்றதுமே அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருகிலிருந்த ஊர்வசி ரவுட்டேலா அவருக்கு கை கொடுத்து நன்றியை தெரிவித்தார். உடனே தன் மீது மின்சாரம் பாய்ந்தது போன்று ஜெர்க் ஆனது போல பாவனை செய்த சிரஞ்சீவி, “என்னுடைய கை அப்படியே ஸ்தம்பித்துப் போனது.. காரணம் என் கைகளில் அல்ல, இதயத்தில் இருக்கும் காந்தத்தால்” என்று இன்னும் புகழ ஆரம்பித்ததும் ரொம்பவே வெட்கப்பட்டார் ஊர்வசி ரவுட்டேலா.




