'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து விட்டார் நடிகர் டொவினோ தாமஸ். குறிப்பாக இவர், தான் நடிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் விதம், ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்திற்காக தன்னை உருமாற்றிக் கொள்ளும் அர்ப்பணிப்பு என தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் டொவினோ தாமஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான தள்ளுமால திரைப்படமும் இதேபோன்று வித்தியாசமான பாணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது அதிரிஷ்ய ஜலகங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். விருது படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற டாக்டர் பயிற்சி பைஜு இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கான ஒரு தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் டொவினோ தாமஸ். இந்த படத்தில் இவரது கதாபாத்திர புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்ல இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு பெயரே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.