பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், தென்னிந்தியா மட்டுமல்ல வட இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். பாகுபலி படத்திற்குப் பிறகு அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு மட்டுமல்ல அவர் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார், யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பது குறித்த ஆர்வமும் ரசிகர்களிடமும் திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் குறையாமல் இருந்து வருகிறது. அதே சமயம் அவரோ தனது திருமணம் குறித்து பிடிக்கொடுக்காமல் பேசி வருகிறார்.
பாகுபலி படம் வெளியான பின்னர், அவர் நடிகை அனுஷ்காவை காதலிக்கிறார் என்றும் சமீபகாலமாக அதிபுருஷ் படத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் பிரபாஸ் மீது காதலில் விழுந்துள்ளார் என்றும் கூட செய்திகள் வெளியாகின. ஆனாலும் நடிகை கீர்த்தி சனோன் தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என இதுகுறித்து தனது மறுப்பையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நடந்துவரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி கலந்துகொண்ட நடிகர் பிரபாஸிடம் சிக்கலான கேள்விகளை கேட்டு கிடுக்கிப்பிடி போட்டு பதில்களை வாங்கியுள்ளார் பாலகிருஷ்ணா. அப்படி அவர் பிரபாஸின் திருமணம் குறித்து பிரபாஸிடம் கேட்கும்போது, திருமணத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா ? ராம் சீதா மீது எப்போது காதலில் விழுந்தார் என்பது போன்ற மறைமுகமான கேள்விகளை கேட்டார்.
அதற்கு பிரபாஸ் உடனே “அதுதான் அப்படி எதுவும் இல்லை என்று மேடமே மறுத்து விட்டார்களே” என்று ஒரு பதிலளித்தார். அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாலகிருஷ்ணா, “நான் கூட எனது மனைவியை மேடம் என்று தான் கூப்பிடுகிறேன்.. அப்படி நீங்கள் சொல்லும் அந்த மேடம் யார் என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்க, முதலில் ஜானகி என்று ஆதிபுருஷ் கதாபாத்திர பெயரை கூறிய பிரபாஸ் பின்னர் கீர்த்தி சனான் என்று ஒரிஜினல் பெயரை கூறினார். இப்படி ஜாலியாக பல நிகழ்வுகள் அந்த நிகழ்ச்சியில் நடைபெற்றன.