லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? |

தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதன்பிறகு தனுஷுடன் ஜகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்தார். இருந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் சமுத்திர குமாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
தற்போது வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் முழுவதும் இவரது கதாபாத்திரத்தை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.
இது ஒரு பக்கமிருக்க மலையாளத்திளும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வரும் இவர், இன்னொருபக்கம் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
தான் சிறுவயதிலிருந்தே மம்முட்டி ரசிகை என கூறி வரும் ஐஸ்வர்ய லட்சுமி, அவருடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அதேசமயத்தில் அவரது மகன் துல்கர் சல்மான் படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருவது எதிர்பாராத ஒன்று என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.