'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் நடிகர் கொச்சு பிரேமன். 68 வயதான அவர் சுவாச பிரச்னை காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார். 1996ல் ஜெயராம், மஞ்சுவாரியர் நடித்த டில்லிவாலா ராஜகுமாரன் என்கிற படத்தில் நடிகராக அறிமுகமான கொச்சு பிரேமன், கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல முப்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் கொச்சு பிரேமன்
தமிழில் ஒன்றிலிருந்து படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை பெரிய அளவில் கவனம் பெறாமல் போய்விட்டன. இவருக்கு கிரிஜா என்கிற மனைவியும் ஹரி கிருஷ்ணன் என்கிற மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னணி நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்விராஜ், மம்முட்டி உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.